முக்கிய செய்திகள்:
சட்டசபையில் பிரச்சினையை கிளப்புவோம்: மார்க்சிஸ்டு

மார்க்சிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் இதுகுறித்து கூறியதாவது:–

தமிழர்களின் கலாச்சார உடை வேட்டி. சாதாரண கூலி தொழிலாளர்கள் முதல் மேல் மட்ட வர்க்கத்தினர் வரை அனைவரும் விரும்பி அணியும் உடை வேட்டி. மங்களகரமான திருமண நிகழ்ச்சிக்கு கூட வேட்டி அணிவதை பெருமையாக கருதுகிறோம்.

சட்டம் இயற்றக்கூடிய நாடாளுமன்றம், சட்ட மன்றத்தில் கூட வேட்டி அணிந்து செல்ல முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் வேட்டி அணிந்து வருவதை தடுக்கிறார்கள் என்றால் நம் நெஞ்சம் பதைக்கிறது.

எனவே இது குறித்து சட்டசபையில் நாளை பிரச்சினையை கிளப்புவேன். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்