முக்கிய செய்திகள்:
காமராஜர் பிறந்தநாள் விழாவில் சரத்குமார் பங்கேற்பு

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஆங்காங்கே உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பள்ளி மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளன.

மதுரை விளக்குத்தூனில் உள்ள காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் 15.7.2014 அன்று காலை 9 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

சரத்குமார் காலை விமானம் மூலம் மதுரை வரும்பொழுது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.மதுரை தெற்கு வாசல், ஒத்தக்கடை, முனிச்சாலை, சிமெண்ட் ரோடு, சந்தைப் பேட்டை ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும், கண் பார்வை இழந்த குழந்தைகளுக்கும், உதவிப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் படத்திறப்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது.

சுசிநர்சிங் ஆன் கேட்டரிங் பயிற்சிப் பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவ–மாணவிகளுக்கு கட்டணமின்றி நர்சிங் ஆன் கேட்டரிங் பயிற்சி தொடங்கி வைக்கப்படுகிறது.

மதுரை மண்டலச் செயலாளர் ஈஸ்வரன், மதுரை மாநகர கிழக்கு மாவட்டச் செயலாளர் ஒத்தக்கடை கணேசன், மதுரை மாநகர மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபாகரன், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.கார்த்திகைச்சாமி விருதுநகர் மாவட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோர் மதுரை நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

விருதுநகரில் நடைபெறும் காமராஜர் மணிமண்டபப் பணிகளை சரத்குமார் பார்வையிடுகிறார். பின்னர் பெருந்தலைவர் பிறந்து வாழ்ந்த வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்ச்சிகளில் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்