முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க.வினர் நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பாவது:–

கழகத்தின் கொள்கை– குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (திட்டக்குடி பேரூராட்சி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்)

சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.சண்முகம் (ஏத்தாப்பூர் பேரூராட்சிச் செயலாளர், பேரூராட்சி மன்ற 15–வது வார்டு உறுப்பினர்)நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர்)

கோவை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதீஸ்வரன் (பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய மாணவர் அணி துணைச் செயலாளர்)

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன், (தாந்தோணி ஒன்றியக் கழக அவைத் தலைவர்), ஏகாம்பரம் (கரூர் நகர மன்ற 42–வது வார்டு உறுப்பினர்)திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசவுந்தரி (திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு 5–வது வார்டு உறுப்பினர்), கோபால்ராமன் (மேட்டுப்பாளையம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கோவை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலாளர்), வி.பி.கிரி (பொள்ளாச்சி நகரக் கழகச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புப உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

திருச்சி புறநகர் மாவட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர், பொறுப்பில் இருக்கும் அப்துல்கனி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.திருச்சி புறநகர் மாவட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில், திருமலைசாமி நாதன் (காமன் கோவில் தெரு, துவரங்குறிச்சி) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

சேலம் புறநகர் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் மாணிக்கம் (பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.திண்டுக்கல் மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் உதயம் ராமசாமி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் பொறுப்பில் உதயம் ராமசாமி (நாகனாம் பட்டி ரோடு, 3–வது வார்டு) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்