முக்கிய செய்திகள்:
மத்திய ரயில்வே பட்ஜெட்: ஜெயலலிதா பாராட்டு

நிதிநெருக்கடியைக் கருத்தில் கொண்டு எதிர்காலச் சிந்தனையுடன் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.

எரிபொருள் உயர்விற்கேற்ப கட்டணங்களை உயர்த்தும் முந்தைய ஆட்சியின் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டாம் என்று அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் வைர நாற்தரப்பு அதிவேக ரயில் நெட்வொர்க் ரயில் போக்குவரத்தின் முதுகெலும்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ரயில் பாதுகாப்புக்கு மாநில அரசுகளுடன் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது, சென்னைக்கு புதிய ரயில்களை இயக்கும் ரயில்வேயின் முடிவு, மேல்மருவத்தூர், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். புல்லெட் ரயிலை நாடே ஆவலுடன் எதிர்பாக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பதால் தமிழ்நாட்டிலும் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் ரயில்வே திட்டங்கள் விரைவில் நிறைவேறும் என்று தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

சென்னையிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புதிய ரயில்களை இயக்கும் திட்டம் மற்றும் மேல்மருவத்தூர் மற்றும் வேளாங்கன்னிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கும் திட்டத்தையும் ஜெயலலிதா வரவேற்றுள்ளார்

மேலும் செய்திகள்