முக்கிய செய்திகள்:
மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் : நெல்லை மேயர் வழங்கினார்

முருகன் குறிச்சி பள்ளியில் 349 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்புகளை மேயர் (பொ) ஜெகநாதன்வழங்கினார். நெல்லை முருகன்குறிச்சியில் உள்ள மேரிஜார்ஜண்ட் பள்ளியில் தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் செந்தில் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை மேரிஜான்சி வரவேற்றார். பள்ளி தாளாளர்தன்ராஜ்சாமுவேல்முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி மேயர்(பொ) ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 349 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் தச்சை மாதவன், பாளை எம்சி.ராஜன், கவுன்சிலர்கள் வண்ணைகணேசன், கோமதி நடராஜன், மாவட்ட கவுன்சிலர் பரமசிவ ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில்கஸ்தூரி நன்றி கூறினார்.

 

மேலும் செய்திகள்