முக்கிய செய்திகள்:
நெல்லைக்கு 12 ம் தேதி விஜயகாந்த் வருகை

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக போட் டியிட்ட 14 தொகுதிகளிலும்  தோல்வியை தழுவியது. 10 தொகுதிகளில் டெபா சிட்டை இழந்ததோடு, அதன் வாக்கு விகிதமும் 5.1 சதவீதமாக குறைந்தது. தேமுதிக வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு குறித்து ஆராய கட்சியினருக்கு தலைமை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

கட்சியின் கிளை மற்றும் நகர அமைப்புகளை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. கடந்த 4ம் தேதி சென் னையில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் மாவட்ட செயலாளர்கள் கட்சியின் தோல்விக்கான காரணத்தை குழு அமைத்து ஆராய வேண்டும் என்று 
தெரிவிக்கப்பட்டது.  மேலும் கட்சியை வலுப்படுத்த பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.இத்தகைய புதிய உத்தரவுகளால் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பொறுப்புகள் கூடியுள்ளன. மேலும் கட்சி யை பலப்படுத்த அவர்கள்புதிய நடவடிக்கைகளையும்மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் மாவட்ட வாரியாக உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சி மூலம் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். இக்கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், ஒன்றியம், பேரூராட்சி, நகரம், பகுதி, ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள் அனைவரும் தலைவரை நேரில் சந்தித்து கட்சியை பலப்படுத்த தங்கள்கருத்துகளை  தெரிவிக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கோவையில் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி தோல்விக்கான காரணம், எதிர்கால திட்டங்கள் குறித்து கருத்து கேட்டார்.

இதன் எதிரொலியாக கட்சியில் சரியாக பணியாற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சுறுசுறுப்பாக பணியாற்றும் புதியவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டமாக வரும் 12ம்தேதி விஜயகாந்த்நெல்லையில்கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அப்போது கட்சி வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டம் குறித்து அவர் கலந்து ஆலோசிக்கிறார். இதனால் தேமுதிகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

மேலும் செய்திகள்