முக்கிய செய்திகள்:
மோடிக்கு ஜெயலலிதா நன்றி

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்: "முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என கடந்த 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் மத்திய நீர்வள அமைச்சகம் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை அமைத்ததற்கான அரசாணை கிடைக்கப்பெற்றோம்.

கடந்த ஜூன் 3-ல் தங்களை சந்தித்தபோது அளித்த மனுவில் முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தேன்.எனது வேண்டுகோளை ஏற்று அதிவிரைவாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள மத்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மத்திய அரசு அமைத்துள்ள மேற்பார்வை குழுவானது நடப்பு பருவமழை காலத்திற்குள்ளதாகவே அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பணியை செம்மையாக மேற்கொள்ளும் எனது உறுதிபட நம்புகிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்