முக்கிய செய்திகள்:
நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ், திமுக வெளிநடப்பு

நெல்லை மாநகராட்சி கூட்டததில் இருந்து காங்கிரஸ், திமுக கவுன்சிலர்கள்வெளிநடப்பு செய்தனர். இதனால்பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.

மேயர்(பொ) ஜெகநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் விஜயன் ரயில் கட்டணத்தை  உயர்த்திய மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் அழகுராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் விஜயன், உமாபதி, சிவன், திமுக கவுன்சிலர்கள் பொன்னையா பாண்டியன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கமாலுதீன், பாஸ்கர், ராஜா, இந்திரா, ஷெரினா, தனலட்சுமி, வசந்தி ஆகியோர் மேயர் இருக்கை அருகே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக கவுன்சிலர் அழகுராஜூம் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து காங்கிரஸ், திமுக கவுன்சிலர்கள்வெளிநடப்பு செய்தனர்.

 

மேலும் செய்திகள்