முக்கிய செய்திகள்:
நெல்லையில் 27ம்தேதி ரயில்மறியல் : காங்கிரஸ்முடிவு

ரயில் கட்டண உயர்வை கண்டித்து நெல்லையில் வருகிற 27ம்தேதி அன்று காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நெல்லையில் இன்று(25/6/2014) நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்டதலைவர் ராம்நாத் தலைமை வகித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சங்கரபாண்டியன், மத்திய அரசு வக்கீல் சிவசுப்பிரமணியன், மாவட்ட துணைதலைவர் தச்சை சண்முகராஜா, மாவட்ட செயலாளர் ராஜேஷ், பீட்டர் சாம், ராஜீவ்காந்தி, கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ம் தேதி காங்கிரஸ் சார்பில் நெல்லையில் நடக்கவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

 

மேலும் செய்திகள்