முக்கிய செய்திகள்:
நெல்லையில் ரயில் மறியல் செய்ய முயன்ற 50 பேர் கைது

நெல்லையில் இன்று (2562014) ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. அதன்படி பயணிகளுக்கான ரெயில்கட்டணம் 14.2 சதவீத மாகவும், சரக்கு ரெயில் கட்டணம் 6.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும்எதிர்ப்பு எழுந்தன. மேலும்பல்வேறு கட்சியினர், அமைப்பினர்போராட்டங்களையும்நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம், அகில இந்திய மாதர் சங்கம் ஆகியவை ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தது. அதன்படி நெல்லை ரயில் நிலையம் முன்பு இன்று (25614) காலையில்ஏராளமானோர்திரண்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சைலஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகுரு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தின்மாவட்டப்பொருளாளர் . நடராஜன், பாளையங்கோட்டை வட்டச்செயலாளர் பெலிக்ஸ், நெல்லை வட்ட செயலாளர் பழனிச்சாமி, அருணாசலம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க சேரன்மகாதேவி ஒன்றியச்செயலர் கீதா, மாவட்டத்தலைவர் மல்லிகா, மாவட்ட துணைச்செயலாளர் கற்பகம்உள்பட பலர்கலந்துகொண்டனர். கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட்டபடி ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றவர்களை, திருநெல்வேலி காவல் உதவி ஆணையர் லோகநாதன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 17பெண்கள்உள்பட 50 பேரை போலீசார்கைது செய்து தனியார்திருமணமண்டபத்தில்அடைத்தனர்.

இதேபோல் தென்காசியில் ரயில் மறியல் செய்ய முயன்ற மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் 47 பேரும், சஙகரன்கோவிலில் தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 14 பேரும்கைது செய்யப்பட்டனர்.

 

மேலும் செய்திகள்