முக்கிய செய்திகள்:
நெல்லை : சங்கர்நகர்ஜெயேந்திரா பள்ளியில்சிறப்பு யாகங்கள்

நெல்லையை அடுத்த சங்கர்நகரில் உள்ள ஜெயேந்திரா பள்ளியில் வேலூர் மாவட்டம் வாலாசுாபேட்டை, கீழபுதுப்பேட்டை, அனந்தலை, மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் கயிலை ஞானகுரு முரளிதர சுவாமிகள் ஆசியுடன் ஐஸ்வர்யம் வழங்கும் 5 சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த யாகங்களானது உலக நன்மைக்காக நடைபெற்றது. நேற்று காலை 7 மணி அளவில் கஜபூஜை, கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 5சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. யாகங்களை முரளிதர சுவாமிகள்துவக்கி வைத்தார்.

தெய்வத்தின் குரல் புகழ் சுவாமிநாதன் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார். இந்த யாக நிகழ்ச்சிகளில் ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி தாளாளர் உஷாராமன், நிர்வாகி மைதிலி உள்பட பலர்கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்