முக்கிய செய்திகள்:
எதிர் தாக்குதலை நடத்த இந்திய ராணுவமும் தயார் : அருண் ஜெட்லி

பாதுகாப்பு துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின் மத்திய மந்திரி அருண் ஜெட்லி காஷ்மீர் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். அவர் எல்லைப்பகுதியின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அம்முயற்சி பார்க்கப்படுகிறது. அப்போது அவரிடம் பிரிவினைவாதிகளுடன் பேச்சு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, இந்தியாவின் இறையாண்மை மற்றும் அரசியலமைப்பை மதிக்கும் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்தார். அம்மாநிலத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து தன்னிடம் தகுந்த ஆதாரமுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எல்லைக்கட்டுக்கோட்டில் உள்ள தற்போதைய நிலவரம் மற்றும் ஜம்முவில் அமர்நாத் யாத்திரைக்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஜெட்லி ஆலோசனை நடத்தினார். அப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு பொருத்தமான எதிர் தாக்குதலை நடத்த இந்திய ராணுவமும் தயாராக உள்ளது என்றார். இந்த ஆலோனை கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, ராணுவ தளபதி விக்ரம் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்