முக்கிய செய்திகள்:
முதியர்வர்களை பராமரிக்க ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தர்மபுரி நகரத்திற்கு அருகே உள்ள ராஜாபேட்டை பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க காளியப்பன் என்ற ஒரு முதியவர் அவரது குடும்பத்தினரால் சரியாக கவனிக்கப்படாமல், இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில், பிளாஸ்டிக் குப்பைகளுக்கு நடுவே வசித்து வருவதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது இடுப்பில் எற்பட்ட எலும்பு முறிவுக்கு தகுந்த சிகிச்சையின்றி அவதிப்பட்டு வருவதாகவும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு தெரியவந்தது.

இதனையறிந்த, முதல்–அமைச்சர் ஜெயலலிதா எவ்வித உதவியும் இன்றி தனியாக குப்பைகளுக்கு நடுவே வசித்து வரும் முதியவருக்கு உரிய உதவி உடனடியாக அளிக்கப்பட வேண்டும் என தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, அந்த முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். உரிய சிகிக்சைக்குப் பிறகு, உறவினர்களால் கைவிடப்பட்ட காளியப்பன் என்ற அந்த முதியவரை அரசு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்குமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்