முக்கிய செய்திகள்:
விடுதிகள்–ஆய்வகங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

திருவள்ளூர் மாவட்டம், மேனாம்பேட்டில் 51 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மேலும், தேனி மாவட்டம்– காமாட்சிபுரம், கடமலைக் குன்று; அரியலூர் மாவட்டம்– வரதராஜன்பேட்டை, ஆண்டிமடம்; சிவகங்கை மாவட்டம்–மணலூர்; கன்னியாகுமரி மாவட்டம்– திங்கள் சந்தை; சேலம் மாவட்டம்–ஓமலூர்; திருச்சிராப் பள்ளி மாவட்டம்–துலையாநத்தம், மணச்சநல்லூர், ஏலூர்பட்டி, திருத்தலையூர்; விருதுநகர் மாவட்டம்– பூவநாதபுரம்;

திருவள்ளூர் மாவட்டம் - திருவொற்றியூர்; கடலூர் மாவட்டம்– சிதம்பரம், அண்ணாகிராமம்; கரூர் மாவட்டம்–புன்னம்; நாமக்கல் மாவட்டம்–வேலம் கவுண்டம்பட்டி; விழுப்புரம் மாவட்டம்–பனையபுரம், கவரை; தூத்துக்குடி மாவட்டம்–குளத்தூர் மற்றும் தூத்துக்குடி கல்லூரி மற்றும் தூத்துக்குடி பள்ளி மாணவி யர் விடுதி;

பெரம்பலூர் மாவட்டம்–ஆதனூர், குறும் பலூர், அரும்பாவூர்; மதுரை மாவட்டம்–மேலூர், மதுரை, வாடிப்பட்டி; திருவண்ணா மலை மாவட்டம்–செய்யார், புதுப்பாளையம்; திண்டுக்கல் மாவட்டம்–வில்பட்டி, சித்தரேவு;

சென்னை மாவட்டம்–வேப்பேரி (முதுநிலை) வேப்பேரி (ஐ.டி.ஐ), இராயபுரம் (இ) சைதாப்பேட்டை, கோடம்பாக்கம்; இராமநாதபுரம் மாவட்டம்– சவேரியார் பட்டினம்; வேலூர் மாவட்டம்–குருவராஜபேட்டை; கிருஷ்ணகிரி மாவட்டம்–அஞ்செட்டி ஆகிய இடங்களில் 21 கோடியே 77 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 39 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ– மாணவியர்களுக்கான கல்லூரி, ஐ.டி.ஐ மற்றும் பள்ளி விடுதி கட்டடங்கள்;

காஞ்சிபுரம் மாவட்டம்-சென்னாக்குப்பம், ரெட்ட மங்கலம்; மதுரை மாவட்டம்– குருத்தூர், சங்கரலிங்கபுரம்; இராமநாதபுரம் மாவட்டம்– செங்கப்படை; கரூர் மாவட்டம்–மாவத்தூர் ஆகிய இடங்களில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 இரு வகுப்பறைகளுடன் கூடிய அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள் ;

ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை அனைத்து வசதிகளுடன் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம்– பொன்மார்; புதுக்கோட்டை மாவட்டம்–வெள்ளாள விடுதி மற்றும் மீனவேலி; திருநெல்வேலி மாவட்டம்– கொளக்கட்டாகுறிச்சி மற்றும் பகவதிபுரம் ராஜீவ் நகர்;

தூத்துக்குடி மாவட்டம் - பூவாணி கிராமம் லெட்சுமிபுரம், சோழபுரம் மற்றும் கோவிந்தம்பட்டி; மதுரை மாவட்டம்– அம்பலத்தடி, அச்சம்பத்து, ஆதனூர் மற்றும் அனஞ்சியூர்; வேலூர் மாவட்டம்– கூராம்பாடி, மாங்காடு, நடுப்பட்டறை; கிருஷ்ணகிரி மாவட்டம் - சிவபுரம் ஆகிய இடங்களில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 சமுதாய நலக் கூடங்கள்;

தருமபுரி மாவட்டம், கருகம்பட்டியில் 18 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உண்டி உறைவிட ஆரம்பப்பள்ளி கட்டடம் ;

திருநெல்வேலி மாவட்டம்– நல்லம்மாள்புரம், முன்னீர் பள்ளம், களக்காடு ஆகிய இடங்களில் 34 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட 3 ஆதிதிராவிட நலப்பள்ளி கட்டடங்கள்;

காஞ்சிபுரம் மாவட்டம், ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு 80 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள்;

என மொத்தம் 26 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ– மாணவியர் விடுதிகள், இருவகுப்பறையுடன் கூடிய அறிவியல் ஆய்வகங்கள், சமுதாய நலக் கூடங்கள், உண்டி உறைவிட பள்ளி, புனரமைக்கப்பட்ட ஆதிதிரா விடர் நலப்பள்ளிகள் ஆகியவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், இளைஞர்களுக்கு திறன் வளர்த்தல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வாகனங்கள் வாங்கிட கடனுதவி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதியுதவி, பொருளாதார மேம்பாட்டிற்கான கடனுதவி என 645 பயனாளிகளுக்கு 33 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடனுதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலாளர் கண்ணகி பாக்கியநாதன், தாட்கோ தலைவர் கலைச்செல்வன், தாட்கோ மேலாண்மை இயக்குநர் சுகந்தி, ஆதிதிரா விடர் நல இயக்குநர் சிவ சண்முகராஜா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்