முக்கிய செய்திகள்:
மின் கட்டண விவரங்களை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்து கொள்ளும் திட்டத்தை : ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருச்சி மாவட்டம், தென்னூரில் 8 கோடியே 92 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், சென்னை - மயிலாப்பூர்; கோயம்புத்தூர் மாவட்டம் - காரமடை; விருதுநகர் மாவட்டம் - நல்லமநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் மூன்று 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள்; சென்னை – கோடம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் - நெல்லிக்குப்பம், வேலூர், புதுத்தாங்கல்; கோயம்புத்தூர் மாவட்டம் - கதிர்நாயக்கன்பாளையம், குருநல்லிபாளையம், பதுவம்பள்ளி; கன்னியாகுமரி மாவட்டம் – கருங்கல்; தூத்துக்குடி மாவட்டம் - விஜயாபுரி; புதுக்கோட்டை மாவட்டம் – கீரமங்கலம், மழையூர்; தஞ்சாவூர் மாவட்டம் - சேதுபாவாசத்திரம்,

பட்டுக்கோட்டை; திண்டுக்கல் மாவட்டம் – ஏழுவனம்பட்டி, பாப்பம்பட்டி, கொசவபட்டி; மதுரை மாவட்டம் – நரசிங்கம்பட்டி; கிருஷ்ணகிரி மாவட்டம் – பருகூர்; கரூர் மாவட்டம் - பள்ளப்பட்டி; ஈரோடு மாவட்டம் - தாளவாடி; நாமக்கல் மாவட்டம் – ஜேடர்பாளையம், சேயதமங்கலம்; சேலம் மாவட்டம் - ஐவேலி; வேலூர் மாவட்டம் - வேலூர், காட்பாடி, முகுயதராயபுரம்; விழுப்புரம் மாவட்டம் - இளமங்கலம் ஆகிய இருபத்து ஏழு இடங்களில் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம் - இராமாபுரம், வெள்ளகுளம்; திருப்பூர் மாவட்டம் - வெ.மேட்டுப்பாளையம்;

தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி, நக்கலமுத்தன்பட்டி; திருநெல்வேலி மாவட்டம் - சமாதானபுரம், தச்சநல்லூர்; புதுக்கோட்டை மாவட்டம் - அமரடக்கி; தஞ்சாவூர் மாவட்டம் - குருவிக்கரம்பை; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - வரகனேரி; திருவாரூர் மாவட்டம் - திருவாரூர், மன்னார்குடி; திருவள்ளூர் மாவட்டம் - திருவள்ளூர், மேலப்புடி; இராமநாதபுரம் - நயினார்கோவில்; கரூர் மாவட்டம் - செல்லிவலசு, ஈ.கருங்கல்பட்டி; ஈரோடு மாவட்டம் - சிமிட்டஹள்ளி; திருவண்ணாமலை மாவட்டம் - அனயதபுரம்; வேலூர் மாவட்டம் - பிச்சனூர் ஆகிய இருபது இடங்களில் 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் என மொத்தம் 394 கோடியே 49 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 51 துணை மின் நிலையங்களை இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மின் நுகர்வோருக்கு அவர்களது மின் பயனீட்டளவு கணக்கிடப்பட்டவுடன் மின் கட்டணத் தொகை மற்றும் செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகிய தகவல்களை நுகர்வோர்களின் கைபேசிக்கு, குறுஞ்செய்தி மூலமாகவும், கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி மூன்று தினங்களுக்கு முன்னரே நினைவுப்படுத்தும் வகையிலும் மின் நுகர்வோருக்கான மின் கட்டண விவரம் குறித்த குறுஞ்செய்தி சேவையை முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார். மின் கட்டண விவரம் குறித்த குறுஞ்செய்தி சேவையின் மூலம் தமிழகத்திலுள்ள 2 கோடி மின் நுகர்வோர் பயனடைவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்