முக்கிய செய்திகள்:
பிரதமர் நரந்திரமோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 2 உரத்தொழிற்சாலைகளும் எரிவாயு இணைப்புக்கு மாற மத்திய ரசாயனத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், 2 உரத்தொழிற்சாலைகளும் எரிவாயு இணைப்புக்கு மாற அவகாசம் தேவை எனவும் அதுவரை உர ஆலைகளுக்கு தரப்படும் மானியத்தை நிறுத்தக்கூடாது எனவும் பிரதமர் நரந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில்: "தமிழகத்தில் தூத்துக்குடியிலும், சென்னை மணலியிலும் யூரியா தயாரிக்கும் 2 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இரண்டுமே நாப்தாவை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.இந்நிறுவனங்கள் எரிவாயு மூலம் உரம் தயாரிக்குமாறு மத்திய உர மற்றும் ரசாயன அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

எரிவாயு மூலம் யூரியா தயாரித்தால் கூடுதல் செலவாகும். இந்த முடிவை மத்திய ரசாயனத் துறை அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.மேலும், தமிழகத்தில் உள்ள உர நிறுவனங்களுக்கு எரிவாயு இணைப்பு தரும்வரை மத்திய அரசின் மானியத்தை நிறுத்த வேண்டாம். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்