முக்கிய செய்திகள்:
எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சகிகலா ஆஜராகவில்லை

முதல் – அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

1992 முதல் 1994 வரை வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாததால் இந்த வழக்கு தொடரப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இது நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது முதல்– அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கடந்த 6–ந் தேதி கோர்டில் ஆஜர் ஆக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அன்றைய தினம் ஆஜராக இயலாததால் 9–ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இன்று முதல் – அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் எழும்பூருக்கு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் ஆஜராகவில்லை.

அவர்கள் சார்பாக ஆஜரான வக்கீல், முதல் – அமைச்சர் ஜெயலலிதா அரசு அலுவல் காரணமாக இன்று ஆஜர் ஆக இயலவில்லை. சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லாதால் ஆஜர் ஆகவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.

மேலும் செய்திகள்