முக்கிய செய்திகள்:
அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் உரிமம்: மத்திய மந்திரிக்கு ஜெயலலிதா கடிதம்

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவேண்டும் என்று கடந்த 2012ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை. அரசு கேபிளுக்கு பிறகு விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால், அரசு கேபிள் டிவி.க்கு வழங்கவில்லை. டிஜிட்டல் உரிமம் பெறுவதற்கு அரசு கேள்வி டி.வி.க்கு சட்டப்படி முழு தகுதி உள்ளது. ஆனால், தனியாரின் வர்த்தக நலன்களுக்காக கடந்த அரசு டிஜிட்டல் உரிமத்தை வழங்கவில்லை. முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியும் டிஜிட்டல் உரிமம் தரப்படவில்லை.

எனவே, தாமதமின்றி தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும். டிஜிட்டல் உரிமம் தரப்பட்டால்தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கேபிள் சேவையை அளிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்