முக்கிய செய்திகள்:
திமுக குழு அமைப்பு

திமுக மாவட்டக் கழக நிர்வாகங்களை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

கடந்த 2-ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையாக்குவதற்கும், மேலும் வலிமைப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்ந்து முடிவெடுக்கவும், கழகத் தலைமைக்குப் பரிந்துரை செய்யவும், குழு ஒன்றினை அமைப்பது என்றும், அந்தக் குழுவின் பரிந்துரைகள் மீது தலைமைக் கழகம் முடிவெடுத்து அதனையொட்டி முறைப்படி கழகத்தின் அமைப்பு விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தீர்மானித்தது.

அதன்படி, திமுகவில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டு வருவதற்காக 6 பேர் கொண்ட குழுவை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

குழு உறுப்பினர்கள் விபரம்:

1.பெ.சு. திருவேங்கடம், கலசப்பாக்கம்

2.டி.எஸ். கல்யாணசுந்தரம், திருத்துறைப்பூண்டி

3.இரா. ராஜமாணிக்கம், ஒரத்தநாடு

4.தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.

5.கே.எஸ். ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்

6.எஸ்.எல்.டி. சச்சிதானந்தம், ஈரோடு

மேலும் செய்திகள்