முக்கிய செய்திகள்:
மோடியை சந்தித்தார் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 64 பக்கங்கள் கொண்ட ஒரு மனுவை மோடியிடம் வழங்கினார்.

அந்த மனுவில், “நெய்வேலி, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 15 சதவீத மின்சாரம் வழங்கவேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை பிரச்சினை மற்றும் மீனவர் பிரச்சினையில் தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும்.

பஹ்ரைன் சிறையில் வாடும் தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் கனிவுடன் கேட்டறிந்ததாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்