முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்களுக்கு : சரத்குமார் பாராட்டு

சமக தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், கரிவேப்பிலை சாதம்,புளிசாதம், 3 ரூபாய்க்கு தயிர்சாதம், பொங்கல், 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி, ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என மலிவு விலையில் தரமாக உணவு வழங்கும் அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களுக்கும், அன்றாடம் வேலைக்குச் செல்வோருக்கும் பசி தீர்க்கும் தாய் வீடு போல திகழ்ந்து வருகிறது.

ஏற்கெனவே அண்டை மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அம்மா உணவகங்களைப் பார்வையிட்ட பிறகு தங்கள் மாநிலத்திலும் இதே போன்று அமைக்க முயற்சித்து வருகிறார்கள். சனிக்கிழமை அன்று எகிப்து நாட்டு அதிகாரிகள் அம்மா உணவகங்களை நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் படிப்படியாக அனைத்து மாநகராட்சிகளிலும் இத்திட்டம் மேலு விரிவுபடுத்தப் பட்டு ஆயிரக்கணக்கான உணவ கங்கள் அமைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவை அனைத்திற்கும் பாராட்டுக்குரியவர் தாயுள்ளத் தோடு இந்தத் திட்டத்தை துவக்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர்தான். இதற்கென தமிழக மக்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு களைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

மேலும் செய்திகள்