முக்கிய செய்திகள்:
தமிழக சட்டசபை கூடுகிறது

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால் பட்ஜெட் கூட்டத் தொடரின் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற தொடர் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்து, மத்தியில் புதிய ஆட்சி அமைந்துள்ளதால் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26 (1)–ன்கீழ், பேரவைத் தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை, ஜூலை திங்கள் 10–ஆம் நாள் (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்