முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் தோல்விக்கு காரணம் கண்டறிய வேண்டும் : ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன் இன்று சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். காங்கிரசை பலப்படுத்தும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

பலகீனப்படுத்தும் விதத்தில் கட்சியினர் நடந்து கொள்ளக் கூடாது. தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

கட்சியை பலப்படுத்தும் முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுக்கும். அதனை ஏற்று பணியாற்ற வேண்டும். இதற்கு இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

காங்கிரஸ் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய கடமை உள்ளது. இதை கட்சி நிறைவேற்றும்.

பிரதமரின் செயலாளரை அவசர சட்டத்தின் மூலம் நியமிப்பது முறையல்ல. அது அவசியமானதும் அல்ல.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து இருப்பது நீண்ட ஆய்வுக்குப்பின் எடுக்கப்பட்ட முடிவு. அதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத சர்ச்சை. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

மேலும் செய்திகள்