முக்கிய செய்திகள்:
தொழிலாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி வழங்கினார்

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

உழைப்போர் திருநாளாம் “மே” தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற் சங்கப் பேரவையில் உறுப்பினர் களாக உள்ள, தேர்ந்தெடுக் கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு “குடும்ப நல நிதியுதவி" வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற் சங்கங்களில் இருந்தும் மாவட்டத்திற்கு இருவர் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 50,000- ரூபாய் வீதம், மொத்தம் 53 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக வழங்கினார்.

தங்களுடைய குடும்பச் சூழ்நிலையை அறிந்து நிதியுதவி வழங்கிய கழகப் பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நிதியுதவியினை பெற்றுக் கொண்ட அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் தங்களது மனமார்ந்த நன்றியினை நெஞ்சம் நெகிழ தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்