முக்கிய செய்திகள்:
மத்திய மந்திரிகளுக்கு நடிகை குஷ்பு ஆதரவு

குஷ்பு தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பாரதீய ஜனதா கட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய வெளியுறவு துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள சுஷ்மா சுவராஜை குஷ்பு டுவிட்டரில் பாராட்டி உள்ளார். சுஷ்மாஜி, தங்களுக்கு என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தைரியம் மற்றும் சீரிய முயற்சியால் அந்நிய சக்திகள் வாலாட்ட முடியாது. நீங்கள் சிறப்பான சேவையாற்றுவீர்கள். வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இது போல் கல்வி தகுதி சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய மந்திரி ஸ்மிருதி ராணிக்கும் குஷ்பு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்