முக்கிய செய்திகள்:
மாநிலங்களுக்கிடையே ஓடும் அனைத்து நதிகளும் இணைக்கப்பட வேண்டும் : மதிமுக கூட்டத்தில் தீர்மானம்

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்ற குழு, அரசியல் ஆலோசனை குழு கூட்டம் வைகோ தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி பாராளுமன்ற தேர்தலில் 1977–க்கு பிறகு முதல் முறையாக பிரமிக்கத்தக்க வகையில் வெற்றி பெற்று சாதனைப்படைத்துள்ளது.

இந்த வெற்றியை ஈட்டி பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு ம.தி.மு.க. வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே கருப்பு பணத்தை மீட்பதற்கு தீர்மானம் நிறைவேற்றியதற்காக பாராட்டுகிறோம்.

தேசிய நெடுஞ்சாலைகளை போல் மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளை தேசிய நதிகளாக அறிவிக்க வேண்டும். மாநிலங்களுக்கிடையே ஓடும் அனைத்து நதிகளும் இணைக்கப்பட வேண்டும். தமிழ் மொழிக்கு எதிராக ஆங்கில வழி கல்வி திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்