முக்கிய செய்திகள்:
தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் 4–ந்தேதி நடைபெற உள்ளது

தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் 4–ந்தேதி (புதன் கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2014 பாராளு மன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் ஆகியோர் மட்டும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் யாரும் கழக தலைவர் விஜயகாந்துக்கு சால்வையோ, மாலையோ, பூங்கொத்தோ அளிக்க வேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டுள்ளார்.

எனவே, எவ்வித காரணம் கொண்டும் அதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட அறிவிப்பை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நிர்வாகிகளும் பின்பற்றி ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்