முக்கிய செய்திகள்:
பண்ணை பசுமை கடைகளில் ரூ.9½ கோடிக்கு காய்கறி விற்பனை

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த 3 ஆண்டுகளில் 30 லட்சத்து 2420 விவசாயிகளுக்கு 12,165.23 கோடி பயிர்க்கடன் வழங்கி உள்ளது.

உரிய காலத்தில் பயிர்க் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 7 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் டி.ஏ.பி. யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேவையான அளவு கிடைக்க கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு வழங்கும் வட்டியில்லா கடன் ரூ.130.50 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கை மேம்பாடு அடைய வட்டியில்லா கடனாக 18,449 பேருக்கு ரூ.60.23 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் விலையேற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் சென்னையில் 40 பண்ணை பசுமை காய்கறி கடைகளும் கோவையில் 10 கடைகளும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடை ஒன்றுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வீதம் பங்கு மூலதன உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கடந்த 22–ந்தேதி வரை 34 லட்சத்து 64 ஆயிரத்து 887 கிலோ காய்கறிகள் ரூ.9.67 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரம் முதல் சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடமாடும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்