முக்கிய செய்திகள்:
1500 கிலோ மாம்பழம் அழிப்பு

கோயம்பேடு அவ்வை திருநகர் 3-வது தெருவில் ஒரு வீட்டில் மாம்பழங்களை கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படுவதாக கோடம்பாக்கம் 10-வது மண்டல சுகாதார அலுவலர் ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இன்று காலை ராஜ்குமாரும், சுகாதார நல ஆய்வாளர்கள் அந்த வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் சுமார் 1500 கிலோ மாம்பழங்கள் கார்பைடு கல்மூலம் பழுக்க வைப்பது தெரியவந்தது.

உடனடியாக 1500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். ஒரு லாரி மூலம் பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று அழித்தனர். இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட கூடாது என்று அந்த வீட்டில் உள்ளவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்