முக்கிய செய்திகள்:
இலவச நமோ மீன்: தமிழக பா.ஜனதா ஏற்பாடு

நரேந்திர மோடி தலைமையில் மக்களவைத் தேர்தலை சந்தித்த பா.ஜனதா கட்சி, நமோ டீ ஸ்டால், நடமாடும் நமோ மீன் கடைகள் போன்ற பிரச்சாரத்தின் மூலம் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தனி மெஜாரிட்டியுடன் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியை பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நரேந்திர மோடி நாளை மறுநாள் பிரதமர் பொறுப்பை ஏற்கும்போது அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜனதா மீனவரணி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மீன்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில பா.ஜனதா மீனவரணி தலைவர் சதீஷ் குமார் கூறுகையில், “மோடி பிரதமராக பொறுப்பேற்பதை கொண்டாடும் வகையில் 200 பேருக்கு தலா ஒரு கிலோ மீன்கள் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் சங்கரா, கோலா போன்ற பிரபலமான ஒரு மீன் வழங்கப்படும்” என்றார்.

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று பா.ஜனதா தேர்தல் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்