முக்கிய செய்திகள்:
புதிய உறுப்பினர் சீட்டு: ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி, “கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும்” என்பதற்கு இணங்க, அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான பணிகள் கடந்த 13.6.2013 அன்று தொடங்கப்பட்டு ஏராளமானோர் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி அதற்கான விண்ணப்பப் படிவங்களை 6.8.2013 வரை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்துள்ளனர்.

அதில், 30.7.2013 வரை விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கி, ரசீது பெற்றுள்ள அனைவருக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும்.

ஆகவே, கழக உடன்பிறப்புகள் உரிய ரசீதுகளை தலைமைக் கழகத்திற்கு கொண்டு வந்து காண்பித்து அவரவர்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களைப் பதிவு செய்து கொண்டு, புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ளவர்கள் மட்டுமே, நடைபெற உள்ள கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்