முக்கிய செய்திகள்:
ராஜபக்சேவை அழைத்தது சரியே : தமிழக பா.ஜ.க. விளக்கம்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்: "நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் தவறு ஏதும் இல்லை. இலங்கை தமிழர் நலன் கருதியே ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அதன்பின்னர், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது:

"சார்க் நாடுகளின் தலைவர்களுள் ஒருவராக, இலங்கை அதிபர் ராஜபக்சே இருக்கிறார். இதன் அடிப்படையில்தான் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசின் ஆதரவோடு, இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்தவர்தான் ராஜபக்சே. ஆனால், ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழர் நலனே காரணம். தனி ஈழம் அமைவது என்பது ராஜபக்சேவின் கையில்தான் உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகளை ராஜபக்சே வழங்க வேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சினையைப் பொருத்தவரையில், பாஜக தலைமையிலான அரசு நிச்சயம் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. நான் பதவிக்காக தேர்தலில் போட்டியிடவில்லை. தொகுதிக்காகவும், தமிழக நலனுக்காகவும் பாடுவடுவதுதான் முதல் நோக்கம்" என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

மேலும் செய்திகள்