முக்கிய செய்திகள்:
மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தொலைபேசி உரையாடலின் தொடக்கத்தில் நரேந்திர மோடி தமிழில் வணக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்து மோடியிடம் பேசிய ராமதாஸ், "இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவிருக்கும் உங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும் எப்போதும் இருப்பேன் என்ற உங்களின் மந்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் உங்களுடன் இருக்கிறார்கள்.

உங்கள் தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்