முக்கிய செய்திகள்:
5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: ஜெயலலிதா

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், நாராயணதேவன்பட்டி கிராமத்தில் 20.5.2014 அன்று பெய்த மழையின் காரணமாக ஆலமரம் ஒன்று அருகிலிருந்த சலவைக் கூடாரக் கட்டிடத்தின் மீது விழுந்ததில், அங்கு மழைக்காக ஒதுங்கியிருந்த குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருபாண்டி என்பவரின் மகன் ரமேஷ், மருததேவர் என்பவரின் மகன் மணிகண்டன், காசி தேவர் என்பவரின் மகன் திருபாண்டி, நாராயண தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகதேவர் என்பவரின் மகன் சிங்கத் தேவர், பாதர்வெள்ளையத்தேவர் என்பவரின் மகன் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த ரமேஷ், மணிகண்டன், சிங்கத்தேவர், குணசேகரன் மற்றும் திருபாண்டி ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல்– அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்