முக்கிய செய்திகள்:
தமிழக உரிமைகளை பெற்றுத் தருவோம்: கூட்டணி தலைவர்கள் பேட்டி

டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடியை கன்னியாகுமரியில் வெற்றி பெற தமிழக பா.ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்தினார்.

தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், புதுவை முதல்–மந்திரியுமான ரங்கசாமி, புதுவையில் வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணன், தர்மபுரியில் வெற்றி பெற்ற பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, ஏ.கே.மூர்த்தி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், ஐ.ஜே.கே. தலைவர் பாரி வேந்தர் ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்தும், கை குலுக்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன் பிறகு அன்புமணி அளித்த பேட்டி வருமாறு:–

தமிழகத்தில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய மீனவர்கள் பிரச்சினை, நதிநீர் பிரச்சினை, மின்சாரப் பிரச்சினைகளை தீர்க்க கோரிக்கை வைப்போம். நீர்ப்பாசன திட்டங்கள், மின்சார திட்டங்களையும் பெற்றுத் தருவோம்.

கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவியை பொறுத்தவரை அது மோடியின் விருப்பம். அவர் எனக்கு மந்திரி பதவி தர முன் வந்தால் அதுபற்றி டாக்டர் ராமதாஸ் தலைமையில் கட்சி தலைமை கூடி முடிவு செய்யும். தமிழகத்தில் மந்திரி பதவி வேண்டும் என்று மக்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியதாவது:–

நாடு முழுவதும் எதிர்பார்த்த ஒரு தலைவர் பிரதமராகி இருக்கிறார். இந்த நேரத்தில் வறட்சியை போக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் லஞ்சம்– லாவண்யம் இல்லாத நிர்வாகம் அமையவும் இந்த அரசு பாடுபடும்.

மேலும் செய்திகள்