முக்கிய செய்திகள்:
அதிமுக எம்.பி.க்கள் நாளை ஜெயலலிதாவுடன் சந்திப்பு

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க. எம்.பி.க்களும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஆசி பெற
சென்னை புறப்பட்டு வந்த வண்ணம் உள்ளனர்.

37 எம்.பி.க்களும் இன்று இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள் என தெரிகிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நாளை காலை 11 மணிக்கு இவர்கள் சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து ஆசி பெறுகிறார்கள்.

பின்னர் 37 எம்.பி.க்களும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்