முக்கிய செய்திகள்:
சிதம்பரம் காருக்கு அருகில் மர்ம பை

டெல்லி செல்வதற்காக மதுரையில் இருந்து ப.சிதம்பரம் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார்.

அதே போல டெல்லியில் இருந்து ராணுவ பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் சென்னை வந்தார். 2 பேரும் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்கள். அவர்கள் வந்த காருக்கு அருகில் 2 பைகள் அனாதையாக கிடந்தன.

இதுபற்றி விமான நிலைய இன்ஸ்பெக்டர் மகிமை வீரர் தொழில் பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தார். வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். பயணிகள் அந்த பகுதியில் நடமாட தடை
விதித்தனர்.

பின்னர் அந்த 2 பைகளையும் சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் செல் போன் மற்றும் பெண்கள் அழகு சாதனை பொருட்கள் இருந்தன.

அப்போது ஒரு பயணி ஓடி வந்து அந்த பையை மறந்து வைத்து விட்டு சென்றதாக கூறி பெற்று சென்றார்.

மற்றொரு பையில் லேப் டாப் இருந்தது. அதனை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்