முக்கிய செய்திகள்:
ஜூன் 15-க்குள் வேட்பாளர்கள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்: பிரவீண்குமார்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேட்பாளர்கள் வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் தேர்தல் செலவுக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். செலவு கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் 3 வருடத்திற்கு தேர்தலில் போட்டியிட முடியாது. செலவுக் கணக்கை
சமர்ப்பிக்காதவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்களின் பதவி பறிக்கப்படும்.

சிவகங்கை தேர்தல் முடிவுகள் காலதாமதமாக அறிவிக்கப்பட்டதால் அங்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவுக் கணக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அவர்கள் ஜூன் 16-ம் தேதி சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்