முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் 38 காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 39 பாராளுமன்றத் தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது. இந்த 39 வேட்பாளர்களிலும் கன்னியாகுமரி வேட்பாளர் வசந்தகுமார் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் பா.ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட வசந்தகுமார் 244244 வாக்குகள் பெற்றார். அவர் பொன் ராதாகிருஷ்ணனிடம் 128662 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார். அதே சமயம், ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், வெறும் 62160 வாக்குகளே பெற்றார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 4.3 சதவீத வாக்குகள், அதாவது 17 லட்சத்து 51 ஆயிரத்து 123 வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்