முக்கிய செய்திகள்:
அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவு: ஜெயலலிதா இரங்கல்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வஜ்ரவேல், சேலம் புறநகர் மாவட்டம், அயோத்தியாபட்டினம் ஒன்றியம், குள்ளம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் ஒன்றியம் செண்டியம்பாக்கம் ஊராட்சிக் கழகச் செயலாளர் ஆனந்த், கோவை புறநகர் மாவட்டம், சூலூர் ஒன்றியம், பீடம்பள்ளி ஊராட்சிக் கழகச் செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர்கள் வஜ்ரவேல், அண்ணாமலை, ஆனந்த் மற்றும் கோவிந்த சாமி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணம் அடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்