முக்கிய செய்திகள்:
நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தது

நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி, முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் அசம்கார் தொகுதி ஆகியவற்றில் இன்று வாக்குபதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் அனைவரது பார்வையும் தற்போது வாரணாசியை நோக்கி திரும்பியுள்ளது. இந்த இறுதி கட்ட தேர்தல் மூன்று மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளுக்கு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி உ.பி.யில் உள்ள 18 தொகுதிகளில் 51 சதவிகிதமும், மேற்கு வங்காளத்தில் 17 தொகுதிகளில் 77 சதவிகிதமும், பீகாரில் 6 தொகுதிகளில் 51 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் ஓய்வு பெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 16-ந் தேதி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்