முக்கிய செய்திகள்:
தேமுதிக வெற்றிக்காக மொட்டை போட்ட தொண்டர்கள்

விழுப்புரம் பாராளுமன்றத் தனித்தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் உமாசங்கர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டி நகர தே.மு.தி.க. சார்பில் விழுப்புரம் வழுதரெட்டியில் அமைந்துள்ள மதுரைவீரனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதனைத்தொடர்ந்து விழுப்புரம் நகர செயலாளர் நரசிம்மலுபாபு தலைமையில் 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபு, கேப்டன் மன்ற செயலாளர் ஏழுமலை, நகர அவைத்தலைவர் முருகன், உள்ளிட்ட, பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் மின்னல் சவுகத், கனகராஜ், கோபி, முருகன், ராகேஷ், கணேஷ், ராஜா, குலாம், வெங்கடேசன், கஜேந்திரன், வசந்த், விஜி உள்பட 25–க்கும் மேற்பட்டவர்கள் மொட்டை அடித்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்