முக்கிய செய்திகள்:
பணம் கேட்டு மிரட்டிய ஆசாமிக்கு தர்ம அடி

சேலம் அண்ணா பூங்கா நுழைவு வாயில் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் செல்வி. இன்று மதியம் 1 மணி அளவில் இவர் கடையில் இருந்தார்.

அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடைக்கு வந்து டீ மற்றும் சிகரெட் கேட்டார். அதற்கு செல்வி பணம் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் அந்த நபர் தான் போலீஸ் என்றும், என்னிடமே பணம் கேட்கிறீர்களா? பணம் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டி உள்ளார். மேலும் 100 ரூபாய் கொடு என்றும் கேட்டதாக கூறப்படுகிறது.இதனால் சந்தேகம் அடைந்த செல்வி இது பற்றி டீக்குடிக்க வந்தவர்களிடமும் பக்கத்து கடைக்காரர்களிடமும் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அவனிடம் யார்? என்பது குறித்து விசாரித்தனர்.

அதற்கு அவன் பான் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டை காட்டினார். அதில் அல்லிக்குட்டை தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவனை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.இதுகுறித்து கடைக்காரர் கூறும்போது நேற்றும் இதே ஆள் என் கடைக்கு வந்து டீ கேட்டார். நாங்கள் டீ கொடுத்தோம். ஆனால் பணம் கொடுக்கவில்லை. அதேபோல் இன்றும் டீ கேட்டும், பணம் கேட்டும் மிரட்டினார். இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் வந்தது. இதனால் அருகில் உள்ளவர்களிடம் கூறினேன். போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளோம் என்று கூறினார்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

மேலும் செய்திகள்