முக்கிய செய்திகள்:
அண்ணாமலை பல்கலை. மாணவர் சேர்க்கை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அண்மையில் அரசுடமையாக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி இடம் பெறவில்லை. மாறாக அது சுயநிதி கல்லூரியாக அறிவிக்கப்பட்டு அதற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை தனியாக வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை மருத்துவ கல்வி இயக்ககத்தின் கீழ் ஒற்றை சாளர முறையில் நடைபெறவிருக்கும் நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையை மட்டும் பல்கலைக்கழக நிர்வாகம் மூலமாக நடத்துவது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும்.

இதையே காரணம் காட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளும் தனித்தனியாக மாணவர் சேர்க்கைகளை நடத்த தொடங்கினால், அதை தமிழக அரசு நினைத்தால் கூட சட்டப்பூர்வமாக தடுக்க முடியாமல் போய்விடும். எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்