முக்கிய செய்திகள்:
கூடங்குளம் வழக்கு நாராயணசாமி வரவேற்பு

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது பற்றி மத்திய மந்திரி நாராயணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள இந்த தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று சுப்ரீம் கோர்ட்டே உறுதி செய்துள்ளது.

அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட ரஷியாவின் உதிரிபாகங்கள் தரமானவை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அணுஉலை தொடர்பாக வகுக்கப்பட்ட 15 பாதுகாப்பு நெறிமுறைகளில் 13 நிறைவேற்றப்பட்டுள்ளது. 499 இடங்களில் அணுகசிவு கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.

அணுஉலைகளில் கூடங்குளத்தில் மட்டும் தான் 7 அடுக்கு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் தற்போது அணு கழிவுகள் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்