முக்கிய செய்திகள்:
தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் கடிதம்

சேலம், நாமக்கல் தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடிதம்.

சேலம், நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் நாளை( மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் நேற்று (செவ்வாய் கிழமை) மாலை அறிவித்தது. இந்நிலையில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "சேலம், நாமக்கல் தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதம் நடந்ததாக எந்த ஒரு அரசியல் கட்சியும் புகார் தெரிவிக்கவில்லை. ஆனால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையான தேர்தல் பணியை தற்போதைய நடவடிக்கை சந்தேகத்துக்குள்ளாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்