முக்கிய செய்திகள்:
முல்லைப் பெரியாறு தீர்ப்பு: ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட பிரச்சினை தமிழகத்தின் 10 தென் மாவட்டங்களின் வாழ்வாதரப் பிரச்சினை மட்டுமின்றி தமிழக மக்களின் நியாயமான உணர்வாகவும், கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்பதோடு, இத்தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்