முக்கிய செய்திகள்:
இலங்கை கோரிக்கையை ஏற்ற மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று உலக நாடுகளுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து, அந்த வேண்டுகோளை நம்முடைய இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று நாளேடுகள் சிலவற்றில் செய்தி வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக தனது தாயை இந்தியாவிற்கு அழைத்து வந்தபோது தடை விதிக்கப்பட்ட 424 பேரில் ஒருவர் இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது மனிதாபிமானற்ற செயல். இலங்கையின் தடை உத்தரவு செல்லாது கனடாவும், பிரிட்டனும் அறிவித்துவிட்டன. இலங்கை அரசின் இந்த வேண்டுகோளை, அமெரிக்காவும் நிராகரித்துள்ளது.

"இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது பெருமளவில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டதாக சர்வதேச அளவில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சட்டப்படி உரிய விசாரணை மேற்கொள்ளாத இலங்கை அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது" என்று அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஆனால், தமிழர்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்