முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செய்தியாளர்களை சந்தித்த அவர்: "தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து குறைந்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

குறைந்த தாழ்வு நிலையானது தற்போது கன்னியாகுமரி அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும். சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 7 செ.மீ., இரணியலில் 6 செ.மீ. மழையும் பெய்துள்ளது"என்றார்.

மேலும் செய்திகள்