முக்கிய செய்திகள்:
கடலில் தவித்த மீனவர்களை கடலோரக் காவல்படை மீட்பு

புதுச்சேரியிலிருந்து ஆறு மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர் மீனவர்களில் படகில் உள்ள இன்ஜின் திடீர் என்று பழுதனதால் நடுகடலில் தவித்து கொண்டிருந்த மீனவர்களை பற்றிய தகவல் கிடைத்ததும் இந்திய கடலோர காவல்படை தனி படகில் கேப்டன் குமார் தலைமையில் புறப்பட்டுச் சென்றனர்.

இது குறித்து இந்திய கடலோர காவல்படை அதிகாரி சோமசுந்தரம் கூறுகையில், "இந்திய கடலோரக் காவல்படை படகு 3 கி.மீ. தொலைவு மட்டுமே செல்ல முடியும். கடல் அமைதியாக இருந்ததால் 18 கி.மீ. தொலைவு சென்று மீட்டோம். மீன்பிடி படகில் திசைக்காட்டு கருவி இருந்ததால் சரியான இடத்தை தெரிவித்தனர். கடலில் சிக்கிக் கொண்டால் 0413 - 2257956 என்ற எண்ணுக்கு 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுதான் கடலுக்கு செல்ல தடையுண்டு. சிறிய பைபர் போட் கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்